Wednesday, December 17, 2008

உடலில் வர்ம புள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை முறைகள் மூச்சு அடங்கல் வர்ம இடங்கள்.

உடலில் வர்ம புள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை முறைகள் மூச்சு அடங்கல் வர்ம இடங்கள்.

1. இடதுகால் முன் பக்கம்.

2. உப்புகுத்தி அல்லது குதிகால் பின் பகுதி.

3. கால் வெள்ளை (உள்ளங்கால்)

4. படங்கால்.

5. கால் பெருவிரல்.

6. முன் முட்டு கால் சிரட்டை கீழ்பகுதி இருபுரமும்.

7. வயிற்றில் குரு நாடி.

8. கை பெருவிரல்.

9. மணிக்கட்டின் கீழ்பகுதி.

10. அடிவயிறு.

11. முதுகு வரி.

12. ஐந்து விரல் கீழ் எலும்பின் பகுதி.

13. உள்ளங்கை குழி.

14. முட்டின் மேல் நரம்பு.

15. கை குழி.

16. குறுக்கின் கீழுபகுதி.

17. கூம்புப் பகுதி.

18. புறங்கழுத்து.

19. தொண்டை முன் பகுதி.

20. மார்பு.

21. நெற்றி.

22. செவிகுத்தி காலம்.

23. நட்சத்திரக் காலம்.

24. கண்ணின் மேல் பகுதி.

25. பூணெலும்பு.

26. பிடரி

இவைகள் மூச்சு அடங்கல் வர்மத்தில் நோய் பட்டிருப்பவனுக்கு மேலே குறிப்பிட்ட எந்த பகுதியில் நாடி துடிப்பு உள்ளது என கவனிக்க வேண்டும்.

உடலில் உள்ள முடிச்சுக்கள் விபரம்.

சர முடிச்சு, கருணாதி முடிச்சு, நட்டெல்லு முடிச்சு. பசு-பதி-பாச முடிச்சு, கும்பக முடிச்சு.

பூட்டுக்கள்-காறை எலும்பின் இணைப்பு,இடுப்புப் பூட்டு, முழங்கால் பூட்டு. கணுக்கால் பூட்டு.

தட்டுக்கள்- அடிவயிற்றில், வயிற்றில், மார்பில், உச்சியில், வர்மத்தில் கடுமையாக இள்வர்மம் பாதித்தால் நுரையீரல், கணையம், பித்தப்பை ஆகும்.

வர்ம துடிப்பை தெரியும் இடங்கள்.

1. குதிங்காலின் பக்கவாட்டில் கணு இலும்புக்கு கீழே.

2. வயிற்றில் தொப்புள்.

3. மார்பு எலும்புக்கூட்டில் கீழ் குவியும் மார்பகத்தில்.

4. காதில் பின் பகுதியில்.

5. மூக்கில்.

6. கழுத்து.

7. இரு கைகளில்

8. புருவம்.

9. உச்சி.

10. மர்மஸ்தானத்தில் ஆண், பெண் குறியின் முன் பகுதி.

வாத, பித்த, கப நாடிகளை வைத்து சாத்தியம், அசாத்தியம் அறியும் முறைகள் தெரியவேண்டும்.

-------------------------------------------(தொடரும்)

Monday, October 20, 2008

நிணநீர் சுரபிகள்.

நிணநீர் சுரபிகள்.

நிணநீர் சுரபி உடம்பில் உள்ள திரவத் தன்மை பாதிப்பின்றி இரத்த ஓட்டத்துடன் நிணநீர் உறுப்பு திசுக்களின் நீர் தன்மையை பாதுகாப்பது, நச்சுத் தன்மை பாதிக்காமல் நிணநீர் செல் பாதுகாப்பு அளிக்கிறது.

அதிகமாக நிணநீர் சுரபி கழுத்துப் பகுதி, தொடை பகுதி கைகளுக்கு அடியில் இச்சுரபி உள்ளது.

டான்சில்.

முக்கியமான நிணநீர் சுரபி டான்சில் உள் வாய் முதல் அறைக்கும் தொண்டை பகுதிக்கு இடையில் உள்ளது. சீதோஷ்ண மாறுதலால் குரல் கம்மல், தொண்டை வீக்கம், ஜுரம், தலைவலி, கண்சிவப்பு தோன்றுதல் ஏற்படும்.

உமிழ் நீர் கோளம்.

உமிழ் நீர் உணவை ஸ்டார்ச்சை சர்கரையாக மாற்றும். உணவை மிருதுவாக மாற்றும், தொண்டைக் கேற்ப உணவை தள்ளி விடுகிறது.

உமிழ்நீர் பாதித்தால்-இறைப்பைக்கு உணவு செல்லும் போது ஏப்பம், வயிற்றுவலி, ஜீரணக் கோளாறு, வாந்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மண்ணீரல்.

குடலுக்கு கீழ் சிறுநீரகத்திறுகு இடையில் அமைந்துள்ளது. சிகப்பு அணுக்களை உற்பத்தி செய்யும். சிவப்பு வெள்ளை நிணநீர் திசுக்களை கொண்டது.

உடற் திசுக்களிலிருந்து நிண நீர் தந்துகிகள் மூலம் வெளியேறுகிறது. தந்துகிகள் எல்லா உறுப்புகளிலும் இருக்காது.

இச்சுரபியால் வரும் நோய்-வளர்சிதைமாற்றம் கை கால் வீக்கம், தோல் ஒவ்வாமை இன விருத்தி உறுப்பு பாதிப்பு, மாதவிலக்கு தொடர்பான நோய், இரைப்பை புண் ஏற்படலாம்.

கல்லீரல்.

கல்லீரல் சுரபி ஹார்மோன்களில் தேவையற்ற சிகப்பணுக்களை அழித்து இரும்பு சத்தினை சேமிக்கும் கொழுப்புக்களை ஆக்கல், அழித்தல் செய்யும். பித்த நீரை உற்பத்தி செய்யும். நமது உடலுல் நோய்களிலிருந்து பாதுகாக்கும். இரத்த சிவப்பணுக்களை உணவாக தேவையாகும்.

இரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும்.

மூத்திரத்தில் உள்ள யூரியாவை அமிலமாக தயாரிக்கிறது. குடலில் நச்சுத் தனமையை அகற்றுகிறது.

பித்த நீர்.

கல்லீரல் சுரக்கும் ஜீரண நீர் பித்த நீர் ஆகும். கணைய நீரோடு கலந்து உணவு குழம்பை ஆல்கலின் ஆக மாற்றுகிறது. கணைய நீரோடு கொழுப்பைப் பிரிக்கும், கொழுப்பை செரிக்க துணை புரிகிறது. உடலில் தீங்கு விளைவிக்கும். அணுக்களை அழிக்கும் மலச்சிக்கலை சரி செய்யும் தன்மையுடையது.

கல்லீரல் சுரபியால் வரும் நோய் மன நோய், தசை நோய், வளர்சிதை மாற்றம். இரத்த அழுத்தம்.

மேற்கண்ட நாளமில்ல சுரபிகள், நிணநீர் சுரபிகள் பாதிப்பால் வரும் நோய்களுக்கு சிகிச்சை செய்யும் முறைகள்.

1. யோகா மூலம்.
2. அக்கு பஞ்சர் மருத்துவ மூலம்..
3. வர்ம மருத்துவ மூலம்.
4. சித்த வைத்தியம் மூலம்.
5. ஆயுர்வேத முறையில் வழி உண்டு.

யோகா முறையில்

தைராய்டு சரியாக வேலை செய்ய-

சர்வாங்க ஆசனம்.
உத்ராசனம்.
மத்ராசனம்.

தைமஸ் சுரப்பிக்கு சுரக்க.

சர்வாங்க ஆசனம்.
மத்தியா ஆசனம்.
ஹலா ஆசனம்.

பான்சிரியாஸ் சுரபி சுரக்க

தனுர் ஆசனம்.
புஜங்காசனம்.

அர்த்தமத்திய ஆசனம்.
மயூராசனம்.

அட்ரீனல் சுரபி சரியாக வேலை செய்ய.

சிர சாசனம்.
பாதஸத்த ஆசனம்.

பீனியல் சுரப்பி.

மத்தியாசனம்.
சவாசனம்.
பிராணாயாமம்.

அண்ட சுரபி சரியாக வேலை செய்ய.

சர்வங்காசனம்.
சிரசாசனம்.
பத்மாசனம்.

நாளமில்லா சுரபிகளை சுரக்கவைக்க அக்கு பஞ்சர்முறை.

DV 20 பினியல் கோளாறு.
SJ 20 பிட்யூட்டரி கோளாறு.
GB 21 தைராய்டு கோளாறு.
LI 18 தைராய்டு கோளாறு.

நிணநீர் சுரபி சரியாக வேலை செய்ய

LIV 6 -கல்லீரல், பித்தப்பை.
LIV 13 -கல்லீரல், மண்ணீரல்.

-------------------------------------------(தொடரும்)

Wednesday, September 24, 2008

நாளமில்லா சுரப்பிகளும் அக்குவர்மா மருத்துவமும்.

நாளமில்லா சுரப்பிகளும் அக்குவர்மா மருத்துவமும்.

உடலில் பல வகை சுரபிகள்உள்ளன. தனித்தனியாக திரவங்களை சுரந்து அதற்கென இருக்கும் பாதைகளின் மூலம் இரத்தத்தில் கலந்து மூளை மற்றும் உடலின் சக்திகளை கட்டுப்படுத்தி சரயான முறையில் செயல்படுத்துகிறது. இவை நாளமில்லா சுரபிகள் ஆகும்.

பிட்யூட்டரி சுரபி -: இது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. சிறு பட்டாணி அளவு உள்ளது. இச்சுரபி மூளையுடனும் மூளையின் நரம்பு மண்டலத்துடனும் இணைந்து செயல்படும். சுரபிகளின் தலைமையாக வேலை செய்யும். இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதும் சிறுநீர் உரிய நேரத்தில் வெளிப்படவும் இதவும். தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்பாலைச்சுரக்க வைக்கிறது.

1. பிட்யூட்டரி சுரபி அதிகமாக சுரந்தால் மனிதன் மிகவும் உயரமாக வளருவான். முகத்தின் தாடை எலும்பு, கை விரல்கள், கட்டை விரல்கள், தேவைக்கு அதிகமாக வளரும். தலை எலும்பு பெருத்துவிடுதல்..

2. அதிகமாக வியர்த்தல், பெருத்த உடல் வளர்ச்சி.

3. மாணவ பருவத்தில் அபரிதமாக இருத்தல்.

4. ஆண்மை குறைவு, முதுகு தண்டு வலி, அடிக்கடி தலை வலி, தூக்கமின்மை.

5. உடல் பலஹீனம்.

6. பெண்களிக்கு மாதவிடாய் குறைவு, கூடுதல், சரியான நேரம் வருவதில்லை, கருப்பை வீக்கம், சிறுநீர் அதிகம் போதல், கண்பார்வை கோளாறு.

7. மூளை கட்டிகள்.

8. இதய கோளாறு.

9. நீரிழிவு.

பிட்யூட்டரி சுரபி குறைவாக சுரந்தால் -:

பசியின்மை, குமட்டல், குறை இரத்த அழுத்தம், குட்டை வளர்ச்சி, பிறப்பு உறுப்பு பாதித்தல், உடலில் தோல் சுருக்கம், கட்டிகள், மன வளர்ச்சி குறைந்து போதல், தலை தொண்டையில் உருவாகும் கட்டி, மேக கிரந்தி, சர்க்கரை அளவு குறைதல்.

தைராய்டு.

தொண்டை இரு பக்கங்களிலும் கழுத்தின் முன் புறத்திலும் இரண்டு சுரபிகள் உள்ளன. மூச்சுக் குழலின் மேல் பகுதியில் இரு புரமும் குறுகிய தைராய்டு திசுவினால் ஆனவை.

தைராய்டு அதிகமாக சுரந்தால் –நோய்கள்.

மாதவிடாய் குறைவு, உடல் அரிப்பு, எரிச்சல், கண் பாதிப்பு, ஜன்னி, வாந்தி, எடை குறைவு, பசி அதிகரிப்பு, சுண்ணாம்பு சத்து குறைவு, உயர் இரத்த அழுத்தம், விரல் நடுக்கத்துடன் பலவீனம், தொண்டை வீக்கம், தலையில் கொழுப்புக்கட்டி, இதய தசை துடிப்பு அதிகம், இளம் பெண்கள் இச்சுரபியால் பாதிப்பு.

தைராய்டு குறைந்தால் -: நோய்கள்.

ஹார்மோன் குறைவால் பிறவியிலிருந்து குழந்தை பாதிப்பு அடைதல். பிட்யூட்டரி சுரபியின் கோளாறு, எடை அதிகரிப்பு, தைராய்டு வீக்கம், வறட்சி, மூட்டு வீக்கம், முதுகு வலி, நகங்கள் ஒடியும், மந்தமாக இருப்பார்கள், பெண்கள் மாதவிடாய் 10 நாள் நீடிக்கும், உடலின் நீர் வீக்கம், மலசிக்கல், கை கால் வீக்கம். வம்சா வழியுடன் திருமண உறவு கொள்ளும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மன வளர்ச்சி பாதிப்பு, உடல் வளர்ச்சி குறைவு.

தைமஸ் சுரபி.

சுவாச குழாயின் அடியில் அதன் முன் பாகத்தில் மார்பு கூட்டில் மூச்சுக் குழல் பிரியும் இடத்தில் இதயத்தின் முன்புறம் காணும் சுரபி தைமஸ். நோய் எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்தல். இது ஒரு முதன்மை நிணநீர் உறுப்பு ஆகும். உடல் வளர்ச்சியில் பெரிதாகவும், வளர்ச்சி முடிந்த பின் சிறிதாகவும், சில சமயம் இல்லாமலும் போகும்.

இது பெண்களின் இன உறுப்பு வளரவும், அழகையும் கொடுக்கும். கருப்பை வளர்ச்சி காரணமாகிறது. கருவுற்ற நிலையில் தாய் குழந்தைக்கு திசு வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தை பெறும் போது இடுப்பு உறுப்பு தசை, தசை நார் தளர்வடையச் செய்யும்.

தைமஸ் குறைவால் பெண்களுக்கு வரும் நோய்கள்.

ஊனமுற்ற குழந்தை பிறத்தல். கருப்பை வளர்ச்சியின்மை, குழந்தைபேறுக்குப்பின் மாதவிடாய் போது தொடை,முதுகுதண்டு, இடுப்பு வலி.

ஆண்களுக்கு விந்து சுரபியைசுரக்கும் தன்மையை உண்டுபண்ணுகிறது. ஆண்களின் வளர்ச்சிகளில் வேறுபாடுகள் ஏற்படும்.

அட்ரீனல் சுரப்பிகள்.

சிறு நீரகத்தில் மூடி போட்டால் போல் இச்சுரபி இருக்கும்.

சுரபி அதிகமாக சுரந்தால் தோன்றும் நோய்.

1. பெண்களுக்குஉடல் பருமனாதல், சர்கரை சத்து அதிகம். மீசை வளர்தல், இரத்த அழுத்தம், புத்தி கூர்மை பாதிப்படையும்.

2. உடலில் வெளியேறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சோடியம் உடலில் தங்கி பொட்டாசியம் அதிகம் வெளியேறுவதால் CANN’S நோய் ஏற்பட காரணமாக இருப்பது அல்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பதால் தான்.

3. பெண்களின் மாதவிடாய் தன்மை மாறும். மனிதன் சகிப்புத்தன்மை குறைந்து அயர்ச்சி உண்டாகும்.

இச்சுரபி குறைவானால்.

தசை சக்தி குறைவு, மூச்சு விட கடினம், இரத்த சோகை ஏற்படும், குறைந்த இரத்த அழுத்தம், உடல் சேர்க்கை ஆர்வம், வாந்தி உண்டாகும்.ஜீரண சக்தி குறைபாடுகள்.

கணையம்.

இரப்பைக்குப் பின் உள்ளது. உணவு ஜீரணிக்க வைக்கின்றது. இன்சூலின் நீரை உறபத்தி ஆகிறது. இன்சூலின் மட்டும் 51 அமினோ அமிலமாகக் கிடைக்கிறது.

இன்சூலின் கூடினால்.

1. கல்லீரல், தசைநார்கள், உடலின் மென்மையான தசை, சிறுநீர்ப்பை நாளம் பாதிக்கப்படும்.
2. குளுக்கோஸ் அளவு குறைகிறது.
3. கல்லீரல் குளுக்கோசை வெளியேறும் அளவைக் காட்டிலும் தசைகளின் குளுக்கோஸ் பயன்படுத்தும் அளவு அதிகரிப்பதால் சர்கரை அளவு இரத்தத்தில் குறைந்து விடும்.

இன்சூலின் குறைவால்.

1. கொழுப்பு சிதைவு அதிகமாகி குளுக்கோஸாகிவிடும்.
2. சிறு நீரகம் இரைப்பை பாதிப்பு ஏற்படும்.

இன்சூலின் அதிகமாகும் போது.

1. குளுக்கோஸ்குறையும்.
2. கல்லீரல் குளுக்கோஸ் அளவை விட, தசைகளின் குளுக்கோஸ் அதிகரிப்பதால் சர்கரை அளவு இரத்தத்தில் குறைந்து விடும்.


-------------------------------------------(தொடரும்)

Thursday, August 28, 2008

வர்ம மருத்துவ உடல் பிரிவுகள்.

ஒரு பெண் குழந்தைக்கு பள்ளியில் கரும்பலகையில்
ஆசிரியர் எழுதுவது தெறியவில்லை அதற்காக ஒரு
மாத அக்குப் பிரசர் ஊசிமூலம் சிகிச்சை அளித்தேன்
தற்போது 90 சதம் குணமடைந்து பார்வை தெளிவாக
உள்ளது.அந்த திழற்படந்தான் மேலே நீங்கள் காண்பது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மருத்துவ உடல் பிரிவுகள்.

நமது உடல் பஞ்ச கண்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. சிரசு அதாவது கழுத்திக்கு மேல் பகுதி.
2. நாபி கண்டம் கழுத்துக்கு கீழ் தொப்புள் வரை.
3. மூலக் கண்டம் தொப்புள் முதல் மூலம் வரை.
4. கர கண்டம் இரு கைகளும்.
5. பாத கண்டம் இரு கால்கள்.

உடலில் உள்ள உறுப்புக்கள்-32 ஆகும். இவைகளில் ஒடிவு, முறிவு, குத்து, இடரல், ஏற்பட்டால் வர்ம காயம் ஏற்படும்.

நமது உடலில் உள்ள உறுப்புகள் எலும்புகள் 208 ஆகும். நரம்புகள் 72000 உள்ளன. நரம்புகளிலும் ஏற்படும் பேதங்களினால் இடி, குத்து, தாக்குதல் இவைகளால் வர்மங்கள் ஏற்படும் உடலின் உள் பஞ்ச அடுகுகள், தசபூட்டு விசை உடலில் ஐந்துவிதமான தட்டுக்கள் உள்ளன.

மருத்துவ முறை.

அக மருத்துவம் நாம் உள்ளே சாப்பிடும் மருந்துகள் அக மருந்துகள் நெய்மூலமாகவும், தேன் மூலமாகவும் நோயிக்குத் தக்க மருந்துகளையும், அனு பானங்களையும் மருந்தை முறையாக சுத்தி செய்தும், 1.கஷாயம் மூலமாகவும், 2.பதங்கம், 3.வெள்ளை மூலமாகவும். 4. லேகியம் 5. எண்ணெய் 6.குளிகை, 7.தீநீர்,8. மெழுகு. 9. செந்தூரம் 10. குடி நீர். கற்கம்,11. குழம்பு,
12 செந்தூரம். 13 பற்பம், 14.கட்டு,15.உருக்கு, 16.களங்கு, 17. சுண்ணம்,
18. சத்து, 19. களி, 20. அடை, 21. சூரணம், 22. இரசாயனம், 23. மணபாகு, 24. தேனூறல், 25. சர்பத், 26. மாத்திரை, 27. குருகுளிகை,28. ரசம், 29. கிரதம், 30. கற்கம், 31. புட்டு, 32. வடகம், மூலமாக உடல் உள் மருத்துவ முறையாக கொடுக்கப் படுகின்றன.

புற மருந்துகள்.

உடலில் வெளி அவையங்களில் வெளி உபயோக மருந்துகளை கொண்டு நோயின் தன்மைகளை சுகப் படுத்தும் முறை.

கட்டுதல், பீச்சு, புகை, மையிடல், பொடியிடுதல், நசியம், கலிக்கும், ஊதல், நாசிகாபரணம், முறிச்சல், கீறல், காரம், அறுவை, பட்டை கட்டல், உறிஞ்சல், அசுத்த ரத்தத்தை வாங்குதல், அட்டைவிடல், கட்டிகை, வர்த்தித்தல், நீர், சீலை, களிப்பு, தொக்கணம், பொட்டணம், வேதுகாட்டல், பூச்சு, ஒற்றடம், பற்றிடல், பசை,களி, சலாகை, சிட்டிகை முதலியன.

ஏழு தாதுக்கள் கூடினால் குறைந்தால் என்ன வாகும்.

1.சாரம் கூடினால் பசிகுறைவு.

சாரம் குறைந்தால் தோல் சுரசுரப்பு, நோவு, இளைப்பு, வாட்டம், சப்தத்தில் வெறுப்பு.

2.குருதி கூடினால் புருவம், உதடு, கொப்புள், அண்டம், தோலின் உட்புறம், வெளிப்புறம், உள் பட்ட இடத்தில் கொப்புளம் காணல், ஈரல் வீக்கம், கட்டி, சூலை, பசியின்மை, குருதி வாந்தி, இரத்த மூத்திரம், சிவந்த கண், தோல் சிவப்பு, குருதி தடிப்பு, பெருநோய்,காமாலை, வெறி முதலியன.

குருதி குறைந்தால் புளிப்பு குளிர்ச்சிப் பொருளில் அவா, நரம்பு தளர்ச்சி, வறட்சி, உடல் நிறம் குன்றல் ஆகியவை.

3 ஊனின் கூடினால் கன்னம், வயிறு, தொடை, குறி இவற்றில் கட்டிகள், கண்டமாலை, கிரந்தி, கழுத்து வீங்குதல் முதலியன.

ஊன் குறைந்தால் ஐம்பொறி சோர்வு, கீழ்வலி, தாடை, பிட்டம், தவடை, குறி இவை சுருங்குதல்.

4.கொழுப்பின் அளவு கூடினால் ஊன் மிகுதி பிணிகள், களைப்பு, சின்ன வேலைகளிலும் பெருமூச்சு, பிட்டம், குறி, மார்பு, வயிறு, தொடை ஊன் பெருகி தொங்கல் விழும்.

கொழுப்பு குறைந்தால் இடுப்பு பலவீனமுற்று வலித்தல், உடலிளைப்பு, ஈரல் வளர்ச்சி முதலியன.

5.எலும்பு கூடினால் எலும்புகளும், பற்களும் கூடுதல்.

எலும்பு குறைந்தால் எலும்பு சத்துக்களில் வலி, பற்கள் விழுதல், நகம், மயிர் உதிர்தல், வெடித்தல் முதலியன.

6. மூளை வளர்ச்சி கூடினால் உடல் பாதித்தல், விரல் கணுக்களில் அடி பருத்தல், சிறு நீர் குன்றல் முதலியன.

மூளை குறைவு ஏற்பட்டால் எலும்பு, தோள் விழும், திகைப்பு, கண்கம்மல் இவை காணும்.

7. சுக்கிலம் கூடினால் பெண்ணிச்சையும், கல்லடைபும் வரும்.

சுக்கிலம் குறைந்தால் புணர்ச்சியில் வெண்ணீரும்,சுரேணிதமும் துளியாக வரும், குருதி வரும், விதை குத்தலுடன் வலி, குறி கருத்தல் முதலியன உண்டாகும்.


-------------------------------------------(தொடரும்)

Friday, August 15, 2008

வர்மமும் நமது உடல் அமைப்பும்.

வர்மமும் நமது உடல் அமைப்பும்.

நமது கண்பார்வையில் தெரியும் உடலமைப்பும்-:

1) இதய-ரத்த ஓட்ட சுழற்சிப் பாதை
2) சுவாச பாதை.
3) உணவு பாதை.
4) எலும்பு மண்டலம்.
5) தசை மண்டலம்.
6) நிணநீர் மண்டலம்.
7) நாளமில்லா சுரபிகளின் பாதை.

சக்தியை பயன்படுத்தி வாசி இயக்கம், அமிர்த நிலை இயக்கம் உள்ளன. அவை-:

1. வாசி தச நாடிகளை சார்ந்து ஓடும்.

2. அமிரத நிலை சந்திரனில் ஏற்படும் வளர்பிறை தேய்பிறைகளை ஒத்து உடல் நிலை மாறுபடும். இவ்விரண்டும் வேலை செய்யும் போது அதன் நிலையில் நிற்கும் போது உடலில் அடியோ, மிதியோ, வேகமாகத் தாக்கும், தாக்குதல் பட்டால் வர்மம் ஏற்படும். இவைகள் தாக்கப்படும் போது உடலில் சில புள்ளிகள் அதாவது தசவாயு, தசநாடி, பஞ்சபூதங்கள் இருக்கும் இடங்களில் 12 உறுப்புகளில் உண்டாகும் நரம்பு பாகங்களில் சில புள்ளிகள் உள்ளன. அதுவே வர்மபுள்ளிகளாகும்.

பொறிகள் 5 மர்மம் ஏற்பட்டல் ஏற்படும் வித்தியாசம்.

செவி- ஒலியை அறியும் இவை உடலில் சில இடங்களில் வர்ம புள்ளிகளில் தாக்கும் போது செவியானது தன்னுடைய ஒலி கேட்கும் திறன் குறையும்.

தோல்- வாயு உடனிருந்து உடலை தொடு உணர்வை அறியும். சில வர்மங்களில் அடிபடும் போது உணர்விழந்து மயக்கம் வரும்.

மூக்கு- வாசனையறியவும், வர்மங்களில் அடி படும் போது நீர் வடியும், வாசனை குறையும்.

கண்- பார்க்கும் திறன். அடிபடும்போது கண்களை மூடிக்கொள்ளும். கண் நிலை குத்தி செயல் படாமல் போகும் கண்ணில் நீர் வடியும்.

நாக்கு- சுவை அறியும். சில வர்மங்களில் நாக்கு அடிபட்டால் உள இழுக்கும், அல்லது வெளியே நாக்கு தொங்கிவிடும்.

கன் மேந்திரியம்-:

வாய்- பேச்சுகுரல் கொடுக்கும் இவை வர்மத்தில் தாக்கப்பட்டால் பேச்சு வராது, வாய் பூட்டிக் கொள்ளும், வாய் கோணும்.

கை- வர்மங்களில் பாதித்தால் கை அசைவு இருக்காது, பலம் குறையும், விரல்கள், தசைகள் செயல்படாது.

கால்- பாதம் உணர்ச்சியில்லாமலும் நடக்கும் சக்தியில்லாமலும் நரம்புகள் செயலற்றுப் போகும்.

குதம்-மலத்தைக்கழிக்கும் தன்மையிழந்து தானாகவே வெளியேறும். இது அபாயக் குறியாகும்.

குறி- பலமான வர்மங்கள் ஏற்பட்டால் விந்து தானாகவே வெளியேறும்.

உடலில் ஏற்படும் இயற்கை வேகங்களை அடக்கினால் ஏற்படும் விளைவுகள்.

1) சுவாசம்- சுவாசத்தை அடக்கினால் தொடர்ந்து இருமல்,வயிற்று பொறுமல், சுரம், சூலை நோய் சுவையின்மை நீர்த்தன்மையுண்டாகும்.
2) கண்ணீர்- கண்ணீரை அடக்கினால் தலைவலி, வயிற்று குன்ம ம், கண் நோய், மார்பு நோய் பீனிசம் வரும்.
3) வாந்தி- உடலில் தோல் நோய், நமச்சல், கண்நோய், பித்த விஷம், இரைப்பு, இருமல் வரும்.
4) இருமல்-இருமலை அடக்கினால் மூச்சு திணரல், மூச்சு துர்நாற்றம், இதயநோய் உண்டாகும்.
5) கொட்டாவி-கொட்டாவியை அடக்கினால் முகம் வாடும், இளைப்பு வரும், மண்டை பாரம், மேகநோய், வெட்டை நோய், உணவு செரிக்காமை
6) தும்மல்- தும்மலை அடக்கினால் தலை நோய், முகம் வலிக்கும், இடுப்பு வலி, வர்ம நோய், உண்டாகும்.
7) வாயு-வாயு கீழ் நோக்கினால் ஆசன வழியே செல்லும் அடக்கினால் மார்பு நோய், குடல் வாதம், உடல் வலி, துன்பங்கள், மலசலம் கட்டல், ஜீரண கோளாறு ஆகும்.
8) சிறு நீர்- சிறு நீரை அடக்கினால், கல்லடைப்பு, மூட்டு வலி, ஆண்குறி சோர்வு ஆகிய உண்டாகும்.
9) மலம்- அபான வாயு மலத்தை கீழ்நோக்கித்தள்ளும் மலத்தை அடக்கினால் முழங்கால் வலி, தலைவலி, உடல் சோர்வு, முகச்சோர்வு ஏற்படும்.
10) தாகம்,பசி- பசி அடக்கினால், தாகத்தை அடக்கினால்,உடல் உறுப்புகள் தத்தம் வேலைகளைச் செய்யாது. உடல் இளைப்பு, முகவாட்டம், மூட்டுக்களில் வலி, மூல சூடு, வயிற்று ரோகம் உண்டாகும்.
11) தூக்கம்- தூங்காமல் இருந்தால் மூல சுடு ஏற்படும், தலை பாரம், கண்வலி, செவிடு உண்டாதல், பேச்சு குறைதல்.
12) சுக்கிலம் சுரோணிதம்- அடக்கினால் சுரம், நீர்கட்டு கைகால் மூட்டுகளில் வலி, மார்பு அடைப்பு, வெள்ளை கசிதல்.
13) இளைப்பு- இருமலை அடக்கினால் நுரையீரல் நுண்ணிய தவாரங்கள் அடைப்பு, மூர்ச்சை உண்டாகும்.


-------------------------------------------(தொடரும்)

Tuesday, July 29, 2008

ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள்.

ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள்.

ஆக்கினை -: நெற்றி தலையில் அடிபட்டால் சிலேத்தும நோய், கண்பார்வை குறைவு, காது கேளாமை, ருசியின்மை நீர் தோஷமாகிய ஆஸ்துமா, சயனஸ், பைத்தியம், மண்டை ஓட்டில் அடிபட்டால் நீர் இறங்கும் தன்மை ஆகிய நோய்கள் உண்டாகும். குண்டலீனி யோக தவறாக செய்தாலும் நோய்கள் ஏற்படும்.(பஞ்சபூதங்களின் ஆகாயம் ஆகும்)

விசுத்தி -; நெஞ்சுக்கு மேல் பகுதி அடிபட்டால் நுரையீரல் தாக்கப்பட்டால் சயரோகம், படபடப்பு, ஆஸ்த்மா, குனிந்தால் மூச்சு முட்டுதல், நடந்தால் மூச்சு வாங்குதல் அதிக கோபம் ஆகியவை தாக்கப்படும்.(காற்று தன்மையாகும்)

அளாதகம் -: மேல் வயிற்றுப் பகுதி, பித்தப்பை, கல்லீரல் வீக்கம், வயிறு உப்பிசம், மஞ்சள் காமாலை, ஜீரணக்குறைவு, குடலுருஞ்சிபாதிப்பு, உடல் வீக்கம் முதலியவை ஏற்படும். (நெருப்பு தன்மையாகும்)

மணிபூரகம் :- வயிற்றின் மத்திய பகுதியில் குடல் கிட்னி, நீரடைப்பு, கல்லடைப்பு வரும். (தண்ணீர் தன்மையாகும்.)

சுவதிஷ்டானம் -: வாத சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு ஏற்படும். (மண் தன்மை)

மூலாதாரம் -: மூல நோய், சுக்கில நோய்கள் வரும். இதில் குண்டலீனி யோகம் செய்யும் யோகிகள் குரு மூலம் முறையாக இயக்கத் தெரியவில்லை எனில் மேற்குறித்த நோய்களில் மாட்டிக் கொள்வார்கள். மரணம்வரை வந்து விடும். நமது உடலில் தலையும் மூலாதரமும் வட தென் துருவமாகும். மூலத்தில் ஆடும் சப்தமும் உண்டாகும்

குண்டலினி யோகம் செய்பவர்கள் பிராயணாமம் செய்கிறேன் என்று உடல் ஆரோக்கியமாக இருக்கும் உடலில் எந்த பிரச்சனையும் உண்டாகாது என அசட்டையாக இருகக்கூடாது
இதனை முறையாக செய்யவில்லை எனில் சக்தி ஓட்டம் தவறாக ஓடினால் குடலை சுற்றி உள்ள மெல்லிய ஜவ்வு கிழிந்து சிறு குடல் இறங்கி விடும். இதை குடல் இரக்கம் என கூறுவார்கள்.

யோக சக்திக்கேற்ப சாப்பாடு, எண்ணைய் குளியல் வேண்டும், அவ்வாறு செய்யாவிடில் குறி வழியாகவும் குதம் மூலம் வழியே கீளே வெப்பத்தை வீசும். விந்து வெளி வரும், மூலவியாதி தாக்கும். அதிக குளிரால் குறியை செயலிழக்க வைக்கும், குடல் சரியாக வேலை செய்யாது.

எனவே ஆறு ஆதாரங்கள் முறையாக வேலை செய்ய வேண்டும் இவைகளில் வர்ம புள்ளி தாக்கப்பட்டால், செயலிழக்கவில்லை என்றாலும் மேற்கண்ட நோய்களால் பீடிக்கப் படும். இந்த நோய்களை குண்டலீனியின் சரியான இயக்கத்திலும், வர்ம மருத்துவரீதியாக குணப்படுத்த முடியும்.
-------------------------------------------(தொடரும்)

Monday, July 14, 2008

நாடிகளும், வாயுக்களும்.

நாடிகளும், வாயுக்களும்.
தச நாடிகளின் இடம்.
1. இருகண்புருவ மத்தியில் எல்லா நாடிக்கும் ஆதாரமாக உள்ளது சுழிமுனை.
2. இடது மூக்கு துவாரம் வரை - சூரியகலை.
3. வலது மூக்கின் வரை - சந்திரக் கலை.
4. வலது கண்ணின் வரை - புருடன்.
5. இடது கண்ணின் வரை - காந்தாரி.
6. வலது காது வரை - அத்தி.
7. இடது காது வரை - அலம்புடை.
8. மூலாதலத்திலிருந்து - சங்கினி.
9. உள் நாக்கு முடியும் வரை - சிங்குவை.
10. அபான வரை - குரு.
தசநாடிகளின் சுற்று.
சூரியகலை - வலது கால் பெருவிரல் முதல் இடது நாசி.
சந்திரகலை - இடது கால் பெருவிரல் முதல் வலது நாசி.
சுழிமுனை - மூலாதரத்தில ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கு நடு நாடியாகும்.
சிங்குவை - மூலாதரம் தொடங்கி உள் நாக்கிலே நன்று விழுங்கச் செய்வது.
புருடன் - மூலாதரம் தொடங்கி வலது கண் வரை நிற்பது.
காந்தாரி - மூலாதரம் தொடங்கி இடதுகண் வரை நற்பது.
அத்தி - மூலாதரம் தொடங்கி வலது காது வரை நிற்பது.
அலம்புடை - மூலாதரம் தொடங்கி இடது காது வரை நிற்பது.
சங்கினி - மூலாதரம் தொடங்கி குறியின் அளவு நிற்கும்.
குரு - மூலாதரத்திலிருந்து அபானத்தில் நிறுகும்.
நமது உடலில் 72000 நாடிகள் தசநாடியில் சூரியகலை, சந்திரகலை, சுழிமுனை, முக்கிய நாடிகளாகும் ஆக வாதம் மலத்தில் பித்தம் நீரில் சிலேத்மம் - விந்தில்..
தச வாயுக்களின் சுற்று.
1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. ( தனசெயன்)

பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.
வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.
உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.
சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.
நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.
கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.
கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.
தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.
தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.
ஆறு ஆதாரத்தின் பங்கு.
1. மூலாதாரம். 2. சுவாதிட்டானம். 3. மணிப்பூரகம். 4. அனாகதம்.5. விசுத்தி.
6. ஆக்கினை.

(1) மனம் சித்தமாக நெற்றி புருவ மத்தியில் உள்ளது. இதுவே ஆங்ஞை அல்லது ஆக்கினை என்கின்றோம்.
(2) ஆகாய தத்துவத்தில் சக்கரம் விசுத்தி கழுத்தில் உள்ளது.
(3) வாயு தத்துவத்தில் அநாவிரதம் மார்பு பகுதியில் உள்ளது.
(4) அக்கினி தத்துவத்தில் மணிபூரகம் வயிற்று பக்கத்தில் உள்ளது.
(5) நீர் தத்திவத்தில் அவாதித்தனம் குறிபகுதியில் உள்ளது.
(6) பூமிதத்துவத்தில் மூலாதாரம் குத பகுதியில் உள்ளது.
-----------------------------------(தொடரும்.)

Monday, June 23, 2008

மருத்துவ உடல்இயல் ரீதியாக சரம்.

மருத்துவ உடல்இயல் ரீதியாக சரம்.
ஆதிகாலமுதல் முக்கியத்துவமும் 96 தத்துவங்களில்சரம் முதலிடம் பெறும். உடலின் ஆளுடமைஇவையை யோகம் என்ற முறையில் எட்டு விதமானயோக முறையில் சித்தர்கள் இயக்கினார்கள்.1) இயமம்- அகதூய்மை, 2) நியமம்- புறத்தூய்மை 3) பிராயணாயாமம் - சரத்தில் கலைகளை இயக்குவது.4) யோகாமுறை, 5) புலன்களை அடக்குவது 6)மனதை ஒரு நிலைப் படுத்துதல் 7) மனதைஅடக்கிநரம்புகளை செயல்பட வைப்பது,(தியானம்) 8)சமாதி - சம மான நிலையை அடைதல்.
சரத்தின் செயல் வழியாக இட கலை, வல கலையில் ஒழுங்காக செயல்படவில்லை எனில் நிலைதடுமாறும்போது வர்ம நிலைக்கு கொண்டு செல்லும்ஆகவே சர கலை நாம் ஒழுங்கு செய்ய வேண்டும்இரத்த ஓட்டம் ஒழுங்காக நடைபெற இரவில்இடது பக்கம் படுக்க சூரிய கலை ஓடும். உடலில்வெப்பம் கிடைக்கும், வலது பக்கம் படுத்தால்குளிர்ச்சி தன்மை கிடைக்கும்.
சரத்தைஒழுங்காக இயக்கினால் அமுது சுரக்கும்வழி கிடைக்கும். அமுது கிடைப்பதற்கு காயகற்பம்முறையை கையாளப்படுகிறது.யோக மூலமாக அமுதுவரவைப்பதும் மூலிகையைப் பயன்படுத்தி காயகற்பம்பெறுவதும் தாதுக்களைக் கொண்டு காயகற்பம்செய்வதும் போன்ற முறைகளை கையாண்டார்கள்
சரத்தை பயன்படுத்தி உருவாக்கி அஷ்ட சித்தியையும் செய்தார்கள்.சர ஓட்டம் உடல் நிலையைசம சீர் செய்கின்றது. நமது உடல் சூரிய கலையில்வெப்பம் அதிகப்படும் சந்திரகலையில் உஷ்ணகுறையும் ஆகவே இடது பக்கம் பெண் எனவும்வலது பக்கம்ஆண் எனவும், அக்கு பஞ்சர், அக்குபிரசரில் இன் (YIN) என்றும் யான் (YAN) என்று வைத்திருக்கிறார்கள். ஆகவே வைத்தியர்கள் நாடிநிலையை இடது கையில் பெண்களுக்கும் வலதுகையில் ஆண்களுக்கும் பயன் படுத்தியுள்ளார்கள்.
---------------------------------------(தொடரும்)

Friday, April 4, 2008

சர ஓட்டத்தில் சூரியகலை-வலதுகலை.

சர ஓட்டத்தில் சூரியகலை-வலதுகலை.



1. ஞான ரகசியங்களை குருவிடமிருந்து தெரிந்து கொள்ளுதல்.
2. நாம் ஒருவனுக்கு உதவி செய்தல்.
3. புதிய கலைகளைக் கற்பது.
4. ஒருவரை வணங்குவது.
5. எதிரியை விரட்டுவது.
6. விதை விதைக்க.
7. புதிய செடி நடுதல்.
8. வியாபாரம் செய்தல்.
9. வழக்கு பேசி முடித்தல்.
10. கல்வி கற்றல்.
11. மந்திரம் ஓதுதல்.
12. மருந்து உண்ணுதல்
13. பாம்பு, தேள் விஷம் முறித்தல்.
14. குளிக்கச் செய்தல்.


சுழுமுனையில் சரம் ஓடினால்.


1. தியானம் செய்தல்.
2. வேறு முயற்சியில் ஈடுபட்டால் தோல்வி.
3. சுழிமுனையில் சரம் ஓடும் போது வேறு ஒருவன் தாம் நினைத்ததை கேட்டால் நிச்சையமாக அந்தக் காரியம் நடக்காது எனக் கூறலாம். சரம் ஓடு பகுதி பூரணம் என்றும், ஓடாத பகுதி சூன்யம் என்றும், பூரணத்தில் செயல் படுகின்ற காரியம் யாராலும் வெல்ல முடியாது. சரம் ஓடாத பகுதியில் எதிரியை நிறுத்தி நாம் செய்யக் கூடிய காரியம் வெற்றி பெறும்.


சரத்திற்கும் நான்கு திசைக்கும் சம்பந்தமுண்டு.


மேற்கு, தெற்கு சந்திரக் கலை - இடது நாசி.

வடக்கும், கிழக்கும் சூரிய கலை - வலது நாசி.



மேற்கூறிய கலைகளில் பயணம் செய்தால் அந்தக் காரியம் வெற்றியாகும்.


வர்ம ரீதியாக சரத்திற்குள்ள ஐந்து பூதங்களுக்கு தொடர்பு.


மூக்கில் இருந்து வரும் மூச்சு மூக்குத் தண்டை சார்ந்து வந்தால் பிருத்வி தத்துவ மண் ஆகும்.


கீழ் நோக்கி ஓடினால் தண்ணீர் ஆகும்.


மேலே பாய்ந்து சென்றால் நெருப்பு ஆகும்.


நாசிது தண்டு நேராக மறு புறம் ஓடினால் காற்று ஆகும்.


எந்த பாகமும் இல்லாமல் ஓடினால் ஆகாயம் ஆகும்.


சரம் ஓடுகின்ற நீளம். ஐம்பூதங்களில்

மண் -- 12 அங்குலம்.

தண்ணீர் -- 16 அங்குலம்.

நெறுப்பு -- 8 அங்குலம்.

காற்று -- 4 அங்குலம்.

ஆகாயம் -- 1 அங்குலம்.


சரம் பார்க்கும் நேரம் விடிவதற்கு 5 நாழிகை இருக்கும் போது விதி முறைப்படி தன்னிடம் உள்ள சரம் எது எனத் தெரிய வேண்டும்.
-------------------------------------------(தொடரும்.)

Tuesday, March 18, 2008

சர ஓட்டத்தின் முறைகள்.

சர ஓட்டத்தின் முறைகள்.


மனிதனுக்கு உண்ணும் உணவு மருத்துவமாகும்.
பசியைப் போக்குவது போலவும், உடம்புக்கு
பலத்தையும் கொடுப்பது போல் நாம் சுவாசிக்கும்
காற்றும் நமக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும்
கொடுக்கின்றன. சுவாசிக்கும் காற்று ஒரு நாசி
வழியாக ஓடவும் முடிகிறது. இவை முறையே
சூரியகலை வலது நாசியிலும், சந்திரக்கலை
இடது நாசியில் சுழிமுனை நாடி இரண்டுமில்லாத
இருநாசிகளில் ஓடும். இவைகள் செயல்படும்
போது சரம் (வாசி) பிராண சக்தி உண்டாகின்றது.
இந்த நாடிகள் பஞ்ச பூதங்கள் ஆறு அவதாரங்
களையும், நாடி வகைகளையும், உடலில் உள்ள
காற்று (வாயுக்களையும்) வாத, பித்த சிலேத்மங்
களை இயக்குகின்றது. இவைகள் மூலம் நோய்
களைக் கண்டுபிடுக்கவும், இவைகளின் வித்தியாச
மான செயல்களால் சுகமளிக்கவும் படுகின்றன.
சரவோட்டத்தை மாற்றி அமைக்கும் போது
நோயின் தன்மை குறைக்க முடியும்.


சரத்தினை பக்குவமாக மாற்றி வாழ்க்கையில்
பல சாதனைகளை புரியவும் முடியும்.

அவைகளில்
சந்திரகலை எப்பொருளையும் உண்டாக்கும்
வல்லமை. இதன் நிறம் கருப்பு, இது திர ராசி.

சூரியகலை - வலது பக்க மூச்சு சரராசி ஆகும்.

சுழுமுனை - அழிவாற்றல் சக்தி.

எல்லா செயல்களையும் அழிக்கக் கூடிய வல்லமை
கூடியது. சரம் திரம் இரண்டு ராசியும் உள்ளது. இதன்
ராசி உபயம் ஆகும்.

சந்திரக்கலை - பெண்பாலாகும்,
சூரிய கலை -ஆண்பாலாகும்.
சுழிமுனை - உபய ராசி அக்ரிணை அலியாகும்.

ஊர் விட்டு காரியங்களுக்குச் செல்லும் போது
சந்திரக் கலை ஆரம்பித்து சூரிய கலையில்
காரியங்களுக்கு செல்லும் இடத்தை அடைய
வேண்டும். அந்தப் பயணம் வெற்றி அடைய
முடியும்.

சந்திரக் கலையில் ஓடும் போது செய்ய
வேண்டிய முறைகள்.

1. முக்கிய காரியங்களிக்குக் கடிதம் எழுதலாம்.

2. தூது அனுப்புதல்.

3. ஒருவரை ஒருவர் கலந்து பேசுதல் வெற்றியுண்டாகும்.

4. முக்கிய காரியத்திற்கு நாமே தூது செல்லுதல்.

5. புது ஆடை அணிதல்.

6. ஆபரண்ங்கள் பூணுதல்.

7. திருமணம் செய்தல் அல்லது செய்வித்தல்.

8. ஒருவனை தனக்குப் பணியாளனக அமர்த்துதல்.

9. கிணறு, குளம் வெட்டுதல்.

10. வீட்டுமனை வாங்குதல்.

11. புது வீடு புகுதல்.பொருளை விற்றல்.

12. பெரியோர்களை சந்தித்தல்.

13. பெருயோரைத் துணை கொள்ளுதல்.

14. வினை தீர்க்கும் காரியங்களைச் செய்தல்.

15. அன்போடு தேவதைகளை வேண்டுதல்.

16. எதிரியோடு உடன் படிக்கை கொள்ளுதல்.

17. கல்வி தொடங்குதல்.

18. புதிய சொத்து வாங்குதல்.

19. தீவினைக்கு விடுதலை தேடுதல்.

---------------------------------(தொடரும்)

Saturday, March 1, 2008

சர ஓட்டம்.

4)ஆதி கால வர்ம மருத்துவ முறைகளும்அக்குபிரசர்,
அக்குபஞ்சர் முறைகளும்.(தொடர்ச்சி)



அக்குவர்ம தெரபி முழுமையாக பரம்பரைவர்ம வைத்தி
யத்தை தழுவியது. இந்த வைத்தியம் உப வைத்தியமாக
பெயர் பெற்றாலும். தனித்துவம் வாய்ந்த மருத்துவம்
ஆகும். எந்த வித மருத்துவம் ஆனாலும் பூரணமாக
குணப்பட வைப்பது வர்ம வைத்திய முறையாகும்.
மருத்துவத்தில் அக்குவர்மா முறைகளை கையாண்டால்
முழுவெற்றியை காண்பது முடியும்.

ஆறு ஆதாரங்களை கொண்டும், பஞ்சபூதங்களைக்
கொண்டு நமது உடலை சர பலன்களை உபயோகித்து
உடம்பை சீராக அமைய வைக்கமுடியும். சர ஓட்டம்
அதாவது சூரியக் கலை, சந்திரக் கலை, சுழிமுனை
இவைகள் முறையாக செயல் படவில்லை
எனில் உடல் நலம் குன்றுவதும், பவ காரியங்கள்
ஒழுங்காக செயல் பட முடியாது. இதனை சீராக
இயங்கும் போது உடல் இயல்பு நிலையில் இயங்கும்,
இவைகள் முறையாக இயங்குவதற்கு யோகக்கலை
முக்கியமாக பயன்படுகிறது. இவைகள் சீர்கெட்டுப்
போய்விட்டால் தச வாயுக்களும், தசநாடிகளும்
ஒழுங்காக வேலைசெய்யாது.

நமது உடல் வளர்பிறையில் செயல்படுவதும் தேய்
பிறையில் செயல்படுவதும் வித்தியாசம் இருக்கும்.
சர ஓட்டத்தில் சில வித்தியாசமான புள்ளிகள்
அமைந்துள்ளன. இவைகளை அக்கு பஞ்சர் புள்ளி
களிலும் வர்ம புள்ளிகளிலும் அமைந்துள்ளது. இந்த
புள்ளிகளை உபயோகித்து நமது கைகளைக்
கொண்டு நன்றாக அழுத்தியும், முக்கியமான
புள்ளிகளை இளக்கியும், கூர்மையான வெள்ளி,
தங்கம், உடலை பாதிக்காத உலோக ஊசிகளைக்
கொண்டு உடலில் உள்ள புள்ளிகளில் குத்தி சரி
செய்யமுடியும். நமது உடலில் உள்ள அனைத்து
உறுப்புகளிலும் உள்ள முக்கிய இயக்கப் புள்ளிகளை
இயக்கமுடியும்.

-------------------------(தொடரும்)

Tuesday, February 5, 2008

அக்குபிரசர், அக்குபஞ்சர்

3)ஆதி கால வர்ம மருத்துவ முறைகளும் அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளும்.(தொடர்ச்சி)


வர்மக்கலை அறிந்த குடும்பத்தினர் வர்ம முறைகளைச் சாரந்த சூட்சமத்தை முறையாக பயின்று மனித இனத்திற்கு சிகிச்சை அளித்தனர். இவர்களை வர்ம ஆசான் என்று கூறினார்கள். இவர்கள் முறையே பாரம்பரியமாக சித்த வைத்திய முறைகளையும் ஆயுர் வேத முறைகளையும் சார்ந்த வர்ம வைத்தியம் செய்துவந்தனர்.

இப்போது புது முறைகளையும் யுக்திகளைக் கையாண்டு அக்குபிரசர், அக்குபஞ்சர், சரபயிற்சி, வர்ம் முறை, யோகாசன முறைகளைக் கையாண்டு முதுகுத்தண்டு, கழுத்து, தோள், முட்டிவலிகள், வாய்கோணல், காது கேளாமை, கண்பார்வைக் கோளாறுகள், பேசும் திறன் மற்றும் நாளடைவில் குணம் ஆகாத ஆஸ்த்துமா, டி.பி. இதயநோய், குன்மம், மேகநீரழிவு, விரை நோய், ஆபரேசன் இல்லாத் நரம்பு சம்பந்தப் பட்ட நோய்களை புற மருத்துவத்திலும் குணப்படுத்த முடிகின்றது.

இயற்கை மருத்துவ முறையில் 'உணவே மருந்து' என உணவுகள் மூலம் உடலை சீர் செய்யப் படுகிறது.

விபத்தினால் ஏற்படும் மன அதிர்ச்சியில் பாதிக்கப் பட்ட அதிக இரத்த அழுத்தம், பய உண்ர்வுகள் தூக்கமின்மை, வாய்புலம்பல் ஆகியவைகளையும் அக்குவர்ம தெரபி மூலம் குணப்படுத்த முடியும்.

இத்தகைய சிறப்பு மிக்க அக்கு வர்ம தெரபிமுறையின் பெருமைகள் உலகறிய செய்ய இது போன்ற முறைகளை பல் வேறு அறிஞ்ர்கள் பலவிதமாக முயற்ச்சி செய்துள்ளார்கள் அவைகளில் இம்முறைகளும் ஒன்றாகும். இந்த மருத்துவத்தின் நன்மை தரும் இரகசியங்களை அறிந்து கொள்வோம்.
---------------------------------------------------(தொடரும்)

Friday, January 18, 2008

அக்குபிரசர், அக்குபஞ்சர்

2)ஆதி கால வர்ம மருத்துவ முறைகளும் அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளும்.


ஆதிகாலத்தில் அடிபட்டாலும் இடிபட்டாலும், முறிவு ஏற்பட்டாலும், மற்றும் வர்ம மருந்து ரீதியாக புற மருத்துவம் அக மருத்துவமும் இயற்கையில் கிடைக்கும் பச்சிலைகளைக் கொண்டும், கார சார மருந்துகளைக் கொண்டும். எந்த பக்க விளைவுகளும் இன்றி மருந்துகளைக் கொடுத்து வந்தனர். இது போக அங்கங்கள் முடம் ஏற்படாத வண்ணம், நரம்புகளை சீர் செய்தும், அவைகளை பலம் உண்டாக்குவதற்கு எலும்பு முறிவுகளை தசை பிசகல்களையும் நன்றாகப் பாதிக்கப் பட்ட இடங்களை அழுத்தம் கொடுத்தும், கூர்மையான ஊசி போன்றவைகளைக் கொண்டும், நன்றாக தடவியும், பற்றுக்கள் பூசியும் குணப் படுத்தி வந்தனர்.

பின்பு இறை ஞான சித்தர்கள் அகத்தியர் போகர் முதல் பதினெட்டு சித்தர்கள் முறையாக வர்ம திரவுகோல் முறைகளை உலகுக்கு தெளிவு படுத்தினர்.

போகர் காலத்தில் யுவான் சுவாங் என்ற புத்த சீன யாத்திரிகள் மூலம் சீனாவுக்குச் சென்று முறையே அக்குபஞ்சர், அக்குப் பிரசர், என்றும் அதற்கு வர்மக்கலை அடிப்படையாக கொண்டு மருத்துவம், பற்றிடல், மூலிகைப் பூச்சு, தைலம், ஊசி குத்துதல் முறைகளைக் கையாண்டு வைத்தியம் செய்துவந்தனர். ஆக வர்ம முறைகளில் சில மாற்றங்களை உண்டுபண்ணி அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளைக் கையாண்டு வந்தனர்.

நாளடைவில் கொஞ்சம் வித்தியாசமாக வர்ம தாக்குண்டவர்களை புதிய முறைகளைக் கண்டு வர்ம வைத்தியம் நரம்பு சம்பந்தமாக அவையங்களையும், எலும்பு முறிவு முதலிய நோய்களையும் வர்மரீதியாக சரி செய்ய கற்றுக் கொண்டன்ர். சில கட்டுப் பாடும் இக்கலை மருத்துவத்தை இரகசியமாக குடும்ப, குடும்பமாக வைத்திருந்தனர்.
------------------------------------(தொடரும்)