வர்மமும் நமது உடல் அமைப்பும்.
நமது கண்பார்வையில் தெரியும் உடலமைப்பும்-:
1) இதய-ரத்த ஓட்ட சுழற்சிப் பாதை
2) சுவாச பாதை.
3) உணவு பாதை.
4) எலும்பு மண்டலம்.
5) தசை மண்டலம்.
6) நிணநீர் மண்டலம்.
7) நாளமில்லா சுரபிகளின் பாதை.
சக்தியை பயன்படுத்தி வாசி இயக்கம், அமிர்த நிலை இயக்கம் உள்ளன. அவை-:
1. வாசி தச நாடிகளை சார்ந்து ஓடும்.
2. அமிரத நிலை சந்திரனில் ஏற்படும் வளர்பிறை தேய்பிறைகளை ஒத்து உடல் நிலை மாறுபடும். இவ்விரண்டும் வேலை செய்யும் போது அதன் நிலையில் நிற்கும் போது உடலில் அடியோ, மிதியோ, வேகமாகத் தாக்கும், தாக்குதல் பட்டால் வர்மம் ஏற்படும். இவைகள் தாக்கப்படும் போது உடலில் சில புள்ளிகள் அதாவது தசவாயு, தசநாடி, பஞ்சபூதங்கள் இருக்கும் இடங்களில் 12 உறுப்புகளில் உண்டாகும் நரம்பு பாகங்களில் சில புள்ளிகள் உள்ளன. அதுவே வர்மபுள்ளிகளாகும்.
பொறிகள் 5 மர்மம் ஏற்பட்டல் ஏற்படும் வித்தியாசம்.
செவி- ஒலியை அறியும் இவை உடலில் சில இடங்களில் வர்ம புள்ளிகளில் தாக்கும் போது செவியானது தன்னுடைய ஒலி கேட்கும் திறன் குறையும்.
தோல்- வாயு உடனிருந்து உடலை தொடு உணர்வை அறியும். சில வர்மங்களில் அடிபடும் போது உணர்விழந்து மயக்கம் வரும்.
மூக்கு- வாசனையறியவும், வர்மங்களில் அடி படும் போது நீர் வடியும், வாசனை குறையும்.
கண்- பார்க்கும் திறன். அடிபடும்போது கண்களை மூடிக்கொள்ளும். கண் நிலை குத்தி செயல் படாமல் போகும் கண்ணில் நீர் வடியும்.
நாக்கு- சுவை அறியும். சில வர்மங்களில் நாக்கு அடிபட்டால் உள இழுக்கும், அல்லது வெளியே நாக்கு தொங்கிவிடும்.
கன் மேந்திரியம்-:
வாய்- பேச்சுகுரல் கொடுக்கும் இவை வர்மத்தில் தாக்கப்பட்டால் பேச்சு வராது, வாய் பூட்டிக் கொள்ளும், வாய் கோணும்.
கை- வர்மங்களில் பாதித்தால் கை அசைவு இருக்காது, பலம் குறையும், விரல்கள், தசைகள் செயல்படாது.
கால்- பாதம் உணர்ச்சியில்லாமலும் நடக்கும் சக்தியில்லாமலும் நரம்புகள் செயலற்றுப் போகும்.
குதம்-மலத்தைக்கழிக்கும் தன்மையிழந்து தானாகவே வெளியேறும். இது அபாயக் குறியாகும்.
குறி- பலமான வர்மங்கள் ஏற்பட்டால் விந்து தானாகவே வெளியேறும்.
உடலில் ஏற்படும் இயற்கை வேகங்களை அடக்கினால் ஏற்படும் விளைவுகள்.
1) சுவாசம்- சுவாசத்தை அடக்கினால் தொடர்ந்து இருமல்,வயிற்று பொறுமல், சுரம், சூலை நோய் சுவையின்மை நீர்த்தன்மையுண்டாகும்.
2) கண்ணீர்- கண்ணீரை அடக்கினால் தலைவலி, வயிற்று குன்ம ம், கண் நோய், மார்பு நோய் பீனிசம் வரும்.
3) வாந்தி- உடலில் தோல் நோய், நமச்சல், கண்நோய், பித்த விஷம், இரைப்பு, இருமல் வரும்.
4) இருமல்-இருமலை அடக்கினால் மூச்சு திணரல், மூச்சு துர்நாற்றம், இதயநோய் உண்டாகும்.
5) கொட்டாவி-கொட்டாவியை அடக்கினால் முகம் வாடும், இளைப்பு வரும், மண்டை பாரம், மேகநோய், வெட்டை நோய், உணவு செரிக்காமை
6) தும்மல்- தும்மலை அடக்கினால் தலை நோய், முகம் வலிக்கும், இடுப்பு வலி, வர்ம நோய், உண்டாகும்.
7) வாயு-வாயு கீழ் நோக்கினால் ஆசன வழியே செல்லும் அடக்கினால் மார்பு நோய், குடல் வாதம், உடல் வலி, துன்பங்கள், மலசலம் கட்டல், ஜீரண கோளாறு ஆகும்.
8) சிறு நீர்- சிறு நீரை அடக்கினால், கல்லடைப்பு, மூட்டு வலி, ஆண்குறி சோர்வு ஆகிய உண்டாகும்.
9) மலம்- அபான வாயு மலத்தை கீழ்நோக்கித்தள்ளும் மலத்தை அடக்கினால் முழங்கால் வலி, தலைவலி, உடல் சோர்வு, முகச்சோர்வு ஏற்படும்.
10) தாகம்,பசி- பசி அடக்கினால், தாகத்தை அடக்கினால்,உடல் உறுப்புகள் தத்தம் வேலைகளைச் செய்யாது. உடல் இளைப்பு, முகவாட்டம், மூட்டுக்களில் வலி, மூல சூடு, வயிற்று ரோகம் உண்டாகும்.
11) தூக்கம்- தூங்காமல் இருந்தால் மூல சுடு ஏற்படும், தலை பாரம், கண்வலி, செவிடு உண்டாதல், பேச்சு குறைதல்.
12) சுக்கிலம் சுரோணிதம்- அடக்கினால் சுரம், நீர்கட்டு கைகால் மூட்டுகளில் வலி, மார்பு அடைப்பு, வெள்ளை கசிதல்.
13) இளைப்பு- இருமலை அடக்கினால் நுரையீரல் நுண்ணிய தவாரங்கள் அடைப்பு, மூர்ச்சை உண்டாகும்.
-------------------------------------------(தொடரும்)
Friday, August 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment