Monday, July 14, 2008

நாடிகளும், வாயுக்களும்.

நாடிகளும், வாயுக்களும்.
தச நாடிகளின் இடம்.
1. இருகண்புருவ மத்தியில் எல்லா நாடிக்கும் ஆதாரமாக உள்ளது சுழிமுனை.
2. இடது மூக்கு துவாரம் வரை - சூரியகலை.
3. வலது மூக்கின் வரை - சந்திரக் கலை.
4. வலது கண்ணின் வரை - புருடன்.
5. இடது கண்ணின் வரை - காந்தாரி.
6. வலது காது வரை - அத்தி.
7. இடது காது வரை - அலம்புடை.
8. மூலாதலத்திலிருந்து - சங்கினி.
9. உள் நாக்கு முடியும் வரை - சிங்குவை.
10. அபான வரை - குரு.
தசநாடிகளின் சுற்று.
சூரியகலை - வலது கால் பெருவிரல் முதல் இடது நாசி.
சந்திரகலை - இடது கால் பெருவிரல் முதல் வலது நாசி.
சுழிமுனை - மூலாதரத்தில ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கு நடு நாடியாகும்.
சிங்குவை - மூலாதரம் தொடங்கி உள் நாக்கிலே நன்று விழுங்கச் செய்வது.
புருடன் - மூலாதரம் தொடங்கி வலது கண் வரை நிற்பது.
காந்தாரி - மூலாதரம் தொடங்கி இடதுகண் வரை நற்பது.
அத்தி - மூலாதரம் தொடங்கி வலது காது வரை நிற்பது.
அலம்புடை - மூலாதரம் தொடங்கி இடது காது வரை நிற்பது.
சங்கினி - மூலாதரம் தொடங்கி குறியின் அளவு நிற்கும்.
குரு - மூலாதரத்திலிருந்து அபானத்தில் நிறுகும்.
நமது உடலில் 72000 நாடிகள் தசநாடியில் சூரியகலை, சந்திரகலை, சுழிமுனை, முக்கிய நாடிகளாகும் ஆக வாதம் மலத்தில் பித்தம் நீரில் சிலேத்மம் - விந்தில்..
தச வாயுக்களின் சுற்று.
1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. ( தனசெயன்)

பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.
வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.
உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.
சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.
நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.
கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.
கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.
தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.
தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.
ஆறு ஆதாரத்தின் பங்கு.
1. மூலாதாரம். 2. சுவாதிட்டானம். 3. மணிப்பூரகம். 4. அனாகதம்.5. விசுத்தி.
6. ஆக்கினை.

(1) மனம் சித்தமாக நெற்றி புருவ மத்தியில் உள்ளது. இதுவே ஆங்ஞை அல்லது ஆக்கினை என்கின்றோம்.
(2) ஆகாய தத்துவத்தில் சக்கரம் விசுத்தி கழுத்தில் உள்ளது.
(3) வாயு தத்துவத்தில் அநாவிரதம் மார்பு பகுதியில் உள்ளது.
(4) அக்கினி தத்துவத்தில் மணிபூரகம் வயிற்று பக்கத்தில் உள்ளது.
(5) நீர் தத்திவத்தில் அவாதித்தனம் குறிபகுதியில் உள்ளது.
(6) பூமிதத்துவத்தில் மூலாதாரம் குத பகுதியில் உள்ளது.
-----------------------------------(தொடரும்.)

No comments: