Thursday, October 11, 2007

முன்னுறை



எனது குடும்பம் ஒரு பாரம்பறிய வர்மக்கலை தெரிந்த குடும்பம். பாரம்பரிய வர்ம நோயின் ரகசியங்களை சிகிச்சை முறை மட்டும், செய்து, மக்களுக்கு அறிவுருத்துவதும், உதவி செய்வதுமே எனது நோக்கமாகும்.

வர்மம் என்றால் நமது உடலில் நாம் அறியாமல் அல்லது அறிந்து அடிபடுதல், இடிபடுதல், அதிக சுமைகளை தனது சக்திக்குமேல் தூக்குவது, தவறி விழுவது, இதனால் ஏற்படும் தச நாடிகளும் தச வாய்வுகளும் பாதித்தலை சரிபடுத்துவதே வர்மசிகிச்சையாகும். இவைகளில் அக்கு பஞ்சர் முறையிலும், குறிகளை நன்கு ஆராய்ந்து அக்கு வர்மங்களை நிவர்த்திசெய்யும் முறை அக்கு வர்மதெரபி. முதுகுத் தண்டு, முட்டிகள் கழுத்துப் பகுதியில் ஏற்படும் நோய்களை வர்ம ரீதியாக நரம்புகளையும், எலும்புகளையும், ஆப்பரேசன் இல்லாமல் சரி செய்யும் முறையாகும். மாதாமாதம் எனது வெளியீடுகள் மக்கள் பயன்பெற வெளியிட்டுக் கொண்டே இருப்பேன். எனது புது முயற்சியை வலைப் பிரியர்கள் யாவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.---------------------------------தொடரும்.