1) ஆதி கால வர்ம முறைகள்.
நமது உடம்பில் எலும்பு, தசைகள், நரம்பு, இரத்தக்குளாய்கள் இரத்த தமனிகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி இணைந்து செயல்படும். இவைகளில் குத்து, அடிபட்டால் உடல் மழுவதும் அல்லது அடிபட்ட பகுதி அல்லது முழுவதும் பாதிக்கப்பட்டு நிலைமையே மாற்றி அமையவும், இது நோய் நிலைக்குத் தக்கவாறு உடல்நிலை மாறும். அதிக சீக்கிரமாகவும், நாழிகைகணக்கு முதல், நாள்கள், மாதங்கள், வருடங்கள், ஆகியகாலங்களில் பாதிக்கப்படும். இவைகளை உடனுக்குடன் சரிசெய்வது சாலச்சிறந்தது. வர்ம நிலைகளில் நோய் ஏற்படும்போது சிறு வெளிக்காயம் இல்லாமலும், சாதாரண வலி முதல் அசாத்தியவலி வரையும், சாகும் நிலையிலும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.
பிராணன், காலம், ஜீவன், மர்மம் என்பன. ஆதிகாலத்தில் மனிதன் தனது தற்காப்பிற்கும் திரன், கொடிய மிருகங்களிடத்திலிருந்து தப்பிற்கவும், அதை உணவிற்காகவும் அடித்துக் கொன்றும், உணவிற்காக எளிய முறையில் வேட்டையாடவும், ஒரு நுட்பத்தை கண்டும், மனித எதிரிகளிடத்தில் இருந்து உயிர் தப்பிக்க எதிரிகளை திக்கு முக்காடவும், வர்ம முறைகளை கண்டு எதிரிகளையும், மிருகங்களையும் தாக்கியும், தப்பித்தும் மிருகங்களை வேட்டையாடி உணவாக சாப்பிட்டும் வந்தனர். பின்பு அந்த முறைகளை வைத்து அரசர்கள் படைகளின் பயிற்சிக்கும் வர்ம அடி பட்டவருக்கு வைத்திய முறைகளை கண்டு பிடித்து பாதிக்கப்பட்டவர்களை வைத்தியம் செய்தும், அடக்கி செயலிழக்கச் செய்தும், உள்ளனர்.. இந்த முறைகளை முறைப்படுத்தி, போரிடும் முறைகளையும் தனிப்பட்ட மனிதன் தற்காப்பிற்காகவும், அரசர்கள் தன்வசம் கைக்கு அடக்கமாக வைத்து இக்கலையைப் பாது காத்துவந்தனர். பின்பு இக்கலை சீனா, சென்று குங்பூ, என்றும், கராத்தே என்றும். புதுமைப்படுத்தி புத்த பிச்சுகள் கைவசம் வைத்து அதற்கான வைத்திய முறைகளை அவர்கள் தெளிவு செய்து அக்கு பிரஷர் என்றும், அக்கு பஞ்சர் என்றும் கண்டு பிடித்து வைத்துக் கொண்டனர். நமது நாட்டில் வர்ம தாக்குதலுக்கு சிலம்பம், களரி, வர்ம புள்ளிகளை வைத்து தாக்குதல் நடத்திவந்தனர். வர்ம புள்ளிகளை மாற்றி அமைத்து பாதித்தவரை சிகிச்சை செய்து வந்தனர்.-----------------------------------------------------------------(தொடரும்)
Tuesday, December 25, 2007
Thursday, October 11, 2007
முன்னுறை
எனது குடும்பம் ஒரு பாரம்பறிய வர்மக்கலை தெரிந்த குடும்பம். பாரம்பரிய வர்ம நோயின் ரகசியங்களை சிகிச்சை முறை மட்டும், செய்து, மக்களுக்கு அறிவுருத்துவதும், உதவி செய்வதுமே எனது நோக்கமாகும்.
வர்மம் என்றால் நமது உடலில் நாம் அறியாமல் அல்லது அறிந்து அடிபடுதல், இடிபடுதல், அதிக சுமைகளை தனது சக்திக்குமேல் தூக்குவது, தவறி விழுவது, இதனால் ஏற்படும் தச நாடிகளும் தச வாய்வுகளும் பாதித்தலை சரிபடுத்துவதே வர்மசிகிச்சையாகும். இவைகளில் அக்கு பஞ்சர் முறையிலும், குறிகளை நன்கு ஆராய்ந்து அக்கு வர்மங்களை நிவர்த்திசெய்யும் முறை அக்கு வர்மதெரபி. முதுகுத் தண்டு, முட்டிகள் கழுத்துப் பகுதியில் ஏற்படும் நோய்களை வர்ம ரீதியாக நரம்புகளையும், எலும்புகளையும், ஆப்பரேசன் இல்லாமல் சரி செய்யும் முறையாகும். மாதாமாதம் எனது வெளியீடுகள் மக்கள் பயன்பெற வெளியிட்டுக் கொண்டே இருப்பேன். எனது புது முயற்சியை வலைப் பிரியர்கள் யாவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.---------------------------------தொடரும்.
Subscribe to:
Posts (Atom)